Info
பக்தி இயக்கம், பல்லவர்களின் ஆட்சிக் காலமான கி பி 600 முதல் 900 முடிய உள்ள காலத்தில், தமிழகத்தில், தழைத்தோங்கிருந்த சமணம் மற்றும் பௌத்த சமயக் கருத்துக்களை எதிர்த்து வளர்ந்தது இந்து சமய பக்தி இயக்கம். இக்கால கட்டத்தில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற சைவ மற்றும் வைண சமய பக்தி இலக்கிய நூல்களை இயற்றினர். பெருமளவில் சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய்ச் சமயமான சைவ மற்றும் வைணவ சமயத்திற்கு மாறினர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் உச்ச கட்டத்தை நோக்கிச் சென்றது. சமண, பௌத்த தத்துவக் கருத்துக்களுக்கு எதிரான வாதப் போரில் சைவர்கள் வென்றனர். பக்தி இயக்கத்தின் விளைவாக சைவமும், வைணவமும் தழைத்ததால், தமிழ்நாட்டில் புறச்சமயங்களான பௌத்தமும், சமணமும் மறைந்தது. பக்தி இயக்கத்தால் தமிழ் பக்தி இலக்கியங்கள் மலர்ச்சியடைந்தது. மேலும் தமிழ் நாடெங்கும் சைவ, வைணவக் கோயில்கள் எழுப்பப்பட்டது.
Tags
Stats
Joined Invalid Date
0 total views
Featured video